கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்திய பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு (21.01.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் மேற்கொண்டபோது முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குறித்த நபரை துரத்திச் சென்று வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
jaffna



