புதிய மேயர் தெரிவு சட்டவிரோதமானது : நீதிமன்றத்தை நாடும் முன்னாள் மேயர் மணிவண்ணன்

\யாழ்ப்பாணத்தின் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு செய்யப்பட்டது சட்ட விரோதமானது என முன்னாள் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

tamillk news

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் தெரிவில் சட்ட விரோதமான செயல்கள் இடம் பெறுவதாகவும். இந்த மேயர் தொடர்பில் ஆரம்பம் தொட்டு சட்டவிராத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த நியமனம் திட்டமிட்ட நோக்கத்துடன் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அடிப்படையில் யாழ்ப்பாண மேயர் தேர்வு இடம்பெற்று இருக்கின்றது என நான் நம்புகிறேன்.

உள்ளூராட்சி மன்றத்தின் சுற்றுநிருபம் படி இரண்டு முறைகள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்ல முடியாது அதே போன்று பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்கு போட்டியிட கூடாது என்ற சுற்றுநிறுபம் இருக்கிறது.

இப்போது அந்தச் சுற்று நிருபத்தை மீறி மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆனோல்ட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறிய பின்னர் நிறைவெண் காணாது என உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை ஒத்தி வைத்திருந்தார்.

ஆனால் இதன் பின்பு மோசடியாகவும் சட்ட விரோதமாகவும் ஆர்னோல்ட் யாழ் மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதில் பெரும் அளவு இலஞ்ச, ஊழல் இடம்பெற்றிருக்கின்றதே என எண்ணத் தோன்றுகிறது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு முறைப்பாடு செய்வதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு சட்ட விரோதமான செயல்பாடுகள் நடக்கலாம் என்றால் யாழ்ப்பாணத்திற்கு சட்டங்கள் தேவையில்லை சட்ட புத்தகங்களை குப்பையிலே எரிந்து விட்டு இந்த மேயர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றது என்று அவர் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில் இந்த நியமனம் தொடர்பாக இலஞ்ச, ஊழல் ஆணை குழுவிடம் முறைப்பாடு செய்வதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றோம்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் வேலைகளில் இருந்ததால் சில வழக்குகளை தாக்கல் செய்யாமல் முடியாத நிலை இருந்தது.

இப்போது வேலைகள் அனைத்தும் குறைவடைந்து காணப்படுவதால் உடனடியாக நீதிமன்றத்தை நாடி சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்