உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவுதி நாட்டுக்கு ஐந்து நாள் பயணமாக அமைச்சர் அலி சப்ரி, கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளனர்.
இந்த விஜயம் தொடர்பாக அமைச்சர் காதர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நெருக்கடி தீர்வு காணும் வகையில் இளைஞர்கள், யுவதிகள் இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொள்வது விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த பேச்சு வார்த்தையானது சாதகமாகவும் அமையும் என தெரிவித்தார்.
மேலும் எமது நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக வெளிநாட்டு உதவிகள் மிக முக்கியமானதாக காணப்படுவதாகவும் மற்றும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை விருத்தி செய்யவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் அலி சப்ரி தலைமையில் சவுதி அரேபியாவின் அரசு உயர் மட்டத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ள உள்ளனர்.
நேற்று(24.01.2023) பயணத்தை மேற்கொண்ட குழுவினர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளனர்.



