இந்தியாவின் மாநிலமான ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா மத்திய சுரங்க அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மின்சாரக் கார், கையடக்க தொலைபேசி முதல் அனைத்திலும் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் உற்பத்திக்கு அத்தியாவசியமான அரிய கணியமாக லித்தியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான லித்தியம் உலோக படிவமானது ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலியில் இருந்து இதுவரைக்கும் பெருமளவிலான லித்தியம் வெட்டியெடுக்கப்படுள்ளது.
உலகின் மிகப்பெரிய லித்தியம் படிவமாக 21 மெட்ரிக் தொன் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது எனினும் தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியத்தை விட நான்கு மடங்கு அதிகம்.
இந்தியாவில் முன்னதாக தென் மாநிலமான கர்நாடகாவில் சிறிய அளவிலான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் ஆனது இந்தியாவில் பெரும்பாலான உற்பத்தியாளுக்கு பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



