பல நிலநடுக்கங்கள் இலங்கையில் பதிவாகலாம்: பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

tamillk.com


புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்தியா-ஆஸ்திரேலியா தட்டு உடைந்ததால் இவ்வாறு இலங்கையில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தட்டுக்கு நடுவே நடக்கும் இந்த உடைப்பு மிக வேகமாக நடந்து வருவதாகவும், இவ்வாறு வெடிப்பு ஏற்படும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் வெடிப்பு காரணமாக இலங்கையில் இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்களை உணர்கின்றதாகவும் தெரிவித்தார்.

இந்த சிறிய நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், இந்த தட்டு இலங்கையில் இருந்து சுமார் 1000  மைல் தொலைவில் உடைவதால், ரிக்டர் அளவுகோலில் எதிர்காலத்தில் சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் எனவும் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்