வவுனியாவில் கழிவு குப்பைகளை வீதிகளில் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வவுனியாவில் கழிவு குப்பைகளை வீதிகளில் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamillk.com

வவுனியா புகையிறத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டியவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. இவர்களின் மோட்டார் சைக்கிளில் இலக்கம் ஆகியவை பதிவாகியுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

அதிகமான மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் கழிவு குப்பைகளான, குழந்தைகளின் மலக்கழிவுகளையும், மாமிச கழிவுகளையும் வீசுவதால் வீதிகளில் பயணிக்கும் மக்கள் தூர்நாற்றம் வீசுவதால் பல தொற்றுநோய்கள் உருவாகும் நிலைமையும் காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த வீதியில் இவ்வாறு கழிவு குப்பைகளை வீசப்படுவதை அவதானிப்பதற்காக அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக பரிசோதிக்கப்பட்டு வீதிகளில் கழிவு குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான கழிவு குப்பைகளை வீதி ஓரங்களில் கொட்டுபவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசியமான முறைகளில் அவதானிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்