உலக சிறுநீரக தினத்தில் தேசிய மருத்துவமனையில் சிறுநீரக பரிசோதனைக்கு வாய்ப்பு உள்ளது

 

tamillk news

சிறுநீரக தினமான எதிர்வரும் புதன்கிழமை (8) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் உங்கள் சிறுநீரகங்களை இலவசமாக பரிசோதித்துக்கொள்ள முடியும்.நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு இந்த சிறுநீரகப் பரிசோதனை முக்கியமானதாக அமையும் என வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்தவகையில் மார்ச் 8ஆம் திகதி காலை 8.00 மணியளவில் தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் உலக சிறுநீரக தினத்தில் சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான சிறுநீர் பரிசோதனைக்கான சந்தர்ப்பம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்