யாழ்ப்பாணத்தில் 11 முப்பள்ளி சிறுவர்கள் விபத்து

jaffna tamil news-tamillk

முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விழுந்ததில் 11 முப்பள்ளி சிறுவர்கள் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இன்று (14.06.2023) இடம்பெற்றுள்ளது.




முச்சக்கரவண்டியில் அதிகளமான சிறுவர்களை ஏற்றுக்கொண்டு சென்றதாலே இவ்வாறான விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த விபத்தில் சிக்கிய 11 முப்பள்ளி சிறுவர்களை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரத்தையும் காயமடைந்ததால் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்