நாளை நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நாளை(20) நிகழவுள்ளது. இவ்வகையான அரிய கலப்பு கிரகணம் நாளைய தினம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 நிகழ்வில் இருக்கும்.

இந்த சூரிய கிரகணமானது மொத்தமாக நிகழும் காலமானது ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவினால் காண முடியாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின் போது எச்சரிக்கை

சூரிய கிரகணம்  இடம்பெறும் போது கர்ப்பமாக இருப்பவர்கள் வீட்டினுள் இருக்க வேண்டும் எனவும். அதே போன்று பழங்கள், பூக்கள் ஆகியவற்றை பறிப்பதை தவிக்கு மாறும் தெரிவிக்கப்பட்டது.



சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது எனவும் தெரிவிப்பதோடு பெண்கள் வளையல்கள், ஊசியால் போன்ற உலோகப் பொருட்களை அணிந்திருக்க கூடாது எனவும் மேலும் கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணம் நடைபெறும் வேலை சாப்பிடுவதையும், குடிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 அவசியமாக உணவு உண்ண வேண்டும் நிலை ஏற்பட்டால் புதிய வகை பழங்கள் உட்கொள்ளலாம்

கர்ப்பிணிப்பெண்கள்  வீட்டுக்குள் கதிர்கள் நுழையாமல் இருப்பதற்கு வீட்டின் ஜன்னல்களை அடைத்து விட வேண்டும் அத்தோடு ஜன்னல்களுக்கு மிகவும் கடினமான திரைச்சீலைகளை போடுவது மிக நல்லது.



கிரகணம் நிறைவடைந்ததும் பெண்கள் குளிப்பது மிக நல்லது. மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் வயிற்றைத் தொடாமல் இருக்க வேண்டும். அதேபோன்று உணவுகளை சமைக்காமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்