பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மாற்றம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்

srilanka tamil news


நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து  வரும் காரணத்தால் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும்  சீருடைகள் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் மாணவர்களின் பாதுகாப்பு கருதி டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்குப் பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்தலை வழங்கியுள்ளது.



டெங்கு நோய் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினரின் தலைவர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.




மேலும் அவர் தெரிவிக்கையில்

" மேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக தங்கள் உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வருமாறும். அதேபோன்று வெப்பநிலையை தாங்கும் அளவுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து வருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதை அடுத்து. இந்த தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்வி திணைக்களங்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பி உள்ளோம்.



இதற்கான அங்கீகாரத்தை ஆளுநரும், தலைமைச் செயலாளரும், கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் இருந்து கிடைக்க பெற்றுள்ளது.

இந்த திடீர் சீருடை மாற்றம் டெங்கு நோய் தொடர்பான ஆபத்துக்கள் நீங்கும் வரைக்கும் இதனை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் கூறினார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்