இலங்கை அரசாங்கத்திடம் அழுத்தங்களை கொடுத்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்குரிய முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் ராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இவர் ஊடறுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தபோது மேற்கொண்டவாறு இவற்றை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கைக்குள் பாகிஸ்தானின் பெயரில் P.N.S.திப்பு சுல்தான் நவீன ராடர்களை பொருத்திய சீனா கப்பல் ஒன்று வந்துள்ளது.
அதேபோன்று இலங்கைக்கு கடந்த ஆண்டு சீனாவின் யுவாங் வாங்-5 கப்பனின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு நாட்டின் பெயரில் சீனாவின் கப்பல் கொழும்புக்குள் நுழைந்திருக்கிறது.
இதற்கு இணையாக இந்தியா தனது நீர்மூழ்கி கப்பல் ஆன I.N.S.வாகீர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசின் மீது அழுத்தங்களை கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் மூலமாக இந்தியாவின் அழுத்தங்களை புரிந்து கொள்ள முடியும் என அவர் கூறினார்.