வவுனியா கண்ணாடி பகுதியில் டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாய் மகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் கண்ணாடி பகுதியில் இருந்து பூவரசன்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக தாயும் மகனும் வீதி ஓரத்தில் நின்று பேருந்து வருகைக்காக காத்துக் கொண்டிருந்த வேலை வவுனியாவில் இருந்து மன்னார் பகுதியை நோக்கி மிக வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கரையில் நின்று கொண்டிருந்த தாயின் மகள் மீது மோதியது.
இந்த விபத்தின் போது தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் பலியாகினர்.
இதேவேளை மற்றொரு மகள் டிப்பர் வாகனம் வேகமாக வருவதை அறிந்து அவ்வடத்தை விட்டு ஓடி சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியானவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி(38) நிருபா ( 9) என்ற இருவருமே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தில் மூவர் பயணித்து உள்ளதாகவும் விபத்து ஏற்பட்டது அடுத்து ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். மாற்றிய இரண்டு பேரையும் பொதுமக்களால் துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது டிப்பர் வாகனத்தை சேதப்படுத்தியும் அதை எரிப்பதற்கு முற்பட்டனர். இதன்போது அப்பகுதியில் பெரும் குழப்ப நிலையில் இதனால் மன்னார் வீதியில் சில மணித்தியாலயங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் கொண்டு வந்ததையடுத்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.