யாழ் மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் கழிவறையில் சடலமாக மீட்பு

jaffna news


பேராதனை பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொருளியல் பீடத்தின் முதலாம் வருட மாணவனின் சடலம் ஒன்றை பேராதனை பொலிஸார் மீட்டுள்ளனர்.


குறித்த சம்பவமானது இன்று காலை பல்கலைக்கழகத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இவ்வாறு சடலமாக மீட்டெடுக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நாரந்தனை வடக்கு பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் 23 என்பவரே



பல்கலைக்கழகத்தின் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையில் கழிவறையில் குறித்த மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து.



குறித்த சம்பவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் நிர்வாகமும் மற்றும் பேராதனை பொலிஸ் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார் 

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்