கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவதற்கு கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்



கனேடிய நிரந்தர குடியிருப்புக்காக விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்களின் சுய விவரங்களை சேகரிப்பு தொடர்பில், கனடாவில் இருக்கும் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

மாற்றங்கள்

கனடாவில் நிரந்தரமாக குடியிருக்க அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்தோர் தங்களுடைய கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தை காட்டும் புகைப்படம் ஆகியவற்றை கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவற்றுக்கான விண்ணப்ப கட்டணமாக கனேடிய டொலர் 85 ஆகும். ஜுன் 14 திகதி கொண்டு விண்ணப்பிப்போர்,  வழங்கப்பட்டுள்ள தகவலின் படி கைரேகைகள் மற்றும் முகத்தை காட்டும் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

தற்காலிக குடியிருப்பு

தற்காலிகமாக குடியிருப்பு அனுமதியை விவரங்கள் அனைத்தும் சமர்ப்பித்து இருந்தாலும் மீண்டும் அவர்கள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் இந்த விவரங்கள் அனைத்தையும் உடனடியாக செயல்படுத்துமாறு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்