வவுனியாவில் நடைபெற்று வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை நிறுத்துவதற்கான கலந்துரையாடல் (14.06.2023 ) வவுனியா பிரதேச செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இடம் பெற்ற கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதவர்கள், வைத்தியர், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தீர்மானம்
தனியார் கல்வி நிறுவனங்களினால் இடம்பெற்று வரும் கல்விகள் தொடர்பாக தீர்மானங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் விடுமுறை வழங்குவதுடன் ஏனைய தினங்களில் மாலை 6 மணி வரை நடைபெறுவதற்கு தீர்மானங்கள் முன்வைத்தபோது.
தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்த தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பின்னர் பலதரப்பான கலந்துரையாடலுக்கு பின்பு அனைத்து கல்வி நிறுவனங்களும் ஓர் நிலைப்பாட்டிற்கு வந்தமையால் திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை தரம் 1 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் மாலை 6.30 மணிக்கு நிறைவடையும் வகையிலும்.
கா.பொத.உயர் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையானது மாலை 7 மணியுடன் நிறைவடையும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 1 தொடக்கம் தரம 11 வரைக்குமான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தனியார் கல்வி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்த தீர்மானங்களை எதிர்வரும் 01.07.2023 திகதி அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்கள் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் பதிவுகளை மேற்கொள்வதற்கும் கல்வி நிறுவனங்களின் சுகாதார பிரச்சனைகளையும் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.