குருந்தூர்மலை பகுதியிலுள்ள காணிகளை வழங்கக்கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம்

srilanka tamil news


இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர்மலை விகாரைக்கு அண்மையிலுள்ள காணிகளை தமிழர்களுக்கு பகிர்ந்தளிகுமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்திற்குரிய எல்லால மேதானந்த தேரர் நேற்று (13.06.2023) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.



குருந்தூர்மலை விகாரைக்கு அருகில் உள்ள காணிகள் அனைத்தும் விகாரைக்கு சொந்தம் இல்லை என்றால் அதனை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதியால் உத்தரவு வழங்கிய நிலையில் இவற்றை இனவாத போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்கு சென்றால் வருகின்ற எதிர்காலங்களில் அப்பிரதேசம் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்

sri lanka tamil news


குருந்தூர்மலை விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகம் மூலம் அறிந்துகொண்டேன்.குருந்தி விகாரையைச் சுற்றி உள்ள பல்வேறு பௌத்த இடிபாடுகள் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன.



இந்த நிலங்களை தமிழர்களுக்கு பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல. மேலும் பௌத்த விகாரைக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் மக்களுக்கு காணிகள் வழங்குவது ஏற்புடையதல்ல. இதன் மூலமாக பௌத்த இடிபாடுகளுக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் குடியிருப்புகள் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அந்த நிலத்தை அரசு கொடுத்ததோ இல்லையோ வலுக்கட்டாயமாக அபாகரித்து விட்டதாகவே தெரிகிறது. ஆகையால் இந்தக் காணியின் உரிமையை மாற்றக்கூடாது எனவும் எதிர்காலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்த கூடும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்