( jaffna tamil news-tamillk ) யாழ்ப்பாணத்தில் தீவகப் பகுதியில் தரம் 7 கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு 42 வயதான ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை வழங்கியமைக்காக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவது.
தரம் 7 கல்வி கற்கும் 12 வயதான மாணவி ஒருவருக்கு குறித்த ஆசிரியரால் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவி தனது தாயாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து பெற்றோர்கள் பாடசாலைக்கு இது தொடர்பாக தெரிவித்திருந்த போதும் பாடசாலை மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தனர்.
இதனையடுத்து குறித்த ஆசிரியர் நேற்றைய முன் தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.