மூன்று நாட்களில் 566 கிலோ மீட்டர் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள்

vavuniya news


புதிய சாதனைகள் படைப்பதற்காக இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையிலான நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள் இவர்கள் 556 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வுகள் எடுக்காமல் ஞ தொடர்ச்சியாக நடந்து உலக சாதனை படைக்கவுள்ளர்.

இவ்வாறு சாதனைகளை படைக்க இருக்கும் இரட்டையர்கள் ஆர்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் பொகவந்தலாவை-கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்தவர்கள்.



இவர்களின் சாதனை பயணம் இன்று யாழ்ப்பாணத்தில் அதிகாலை 4 மணி அளவில் தொடங்கி 9 மணித்தியாளம் பயணத்திற்கு பின்பு சரியாக மதியம் 1.00 மணி அளவில் வவுனியாவை வந்தடைந்துள்ளனர்.

இரட்டையர்களின் சாதனை பயணங்கள் 

இவர்கள் இருவரும் முன்பதாக பல சாதனைகளை படைத்துள்ளார்கள் அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நாட்களில் நடந்து நிறைவு செய்து உள்ளார்கள்.



புத்தகத்திலிருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீட்டர் தூரத்தினை ஆறு மணி நேரத்தில் நடந்து சாதனை படைத்துள்ளார்கள்.

மற்றும் ஒரு சாதனையாக கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தினை 18.5 மணித்தியாலயங்களில் நடந்துள்ளார்கள்.



குறிப்பிட்ட இரண்டு இளைஞர்களும் தங்கள் சாதனை பயணத்தினை வெற்றியடைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு எமது tamillk செய்தி தளம் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்