காதலால் ஏற்பட்ட கொடூர கொலை மன்னார் பகுதியில் நடந்த சம்பவம்

mannar tamil news


மன்னார் நானாட்டான் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று(17.06.2023) காலை இடம் பெற்ற கொடூர தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார்.

சம்பவத்திற்கான காரணம்

இந்த தாக்குதலின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் 25 வயது உடைய குடும்பஸ்தரின் சகோதரரான 23 வயது உடைய நபர் ஒருவர் கிராமத்திலே ஒரு யுவதியை காதலித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



நேற்றைய தினம் குறித்த 23 வயதுடைய நபர் தனது காதலியின் வீட்டுக்கு சென்ற வேலை அங்கிருந்த யுவதியின் உறவினர்கள் குறித்த 23 வயது உடைய நபரை மிக கடுமையாக தாக்கியுள்ளார்கள் இதை அடுத்து தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த இளம் 25 வயதுடைய குடும்பத்தார் தனது சகோதரனின் காதலின் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு முரண்பாட்டில் ஈடுபட்டு இருந்தார் இதன் போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இளம் குடும்பசார் மீது காதலின் உறவினர்கள் கூர்மையான ஆயுதங்களால் தலையில் தாக்கியுள்ளனர்.




இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளம் குடும்பஸ்தர் நாணட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அச்சங்குளத்தை கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரியவந்துள்ளது.



உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிய விசாரணைகளை நானாட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்