இலங்கை பௌத்த சிங்கள நாடு இதில் வடக்கு கிழக்கே பிரச்சனை:சரத்வீரசேகர



(srilanka tamil news-tamillk ) இலங்கை நாடானது சிங்கள பௌத்த நாடு இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே பிரச்சனைகளுக்கு உரியதாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றில் மேற்கொண்டவாறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.



மேலும் இந்த சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்.

இலங்கை நாடானது சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதிலும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் நடவடிக்கைகள் ஏற்படும் போது எவ்விதமான முரண்பாடுகளும் தோற்றம் பெறுவதில்லை.




ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் செயல்பாடுகளில் ஈடுபடும்போது அந்த மாகாணங்களில் உள்ள அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றும் அரசியல்வாதிகள் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.



அதேபோன்று கூட்டமைப்பினர்கள் கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குருந்தூர்மலை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய்யாக காணப்படுவதை முன்னாள் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரா மணதுங்க தெளிவுபடுத்தவில்லை.



தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் குருந்தூர் மலையில் தமிழர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து உள்ளார்கள் என்பதை தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது. அதேபோன்று குருந்தூர் மலையில் காணப்படும் தொல்பொருள் மரபுரிமைகள், அடையாளப்படுத்தப்பட்ட நடுகை தூண்களை அகற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

குருந்தூர்மலை விவகாரங்கள் பற்றி பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம் ஆனால் பலவந்தமான முறையில் செயல்பட்டால் நாங்களும் அந்த வழியில் செயல்பட நேரிடும் என தெரிவித்தார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்