தங்காலை நெடோல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிறீட் தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (18) காலை சிறுமி தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் ஊஞ்சல் ஆடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது மகள் உயிரிழந்துள்ளார். ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இளைய பிள்ளை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.