ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் இன்று (ஜூன் 23) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் இரண்டாவது நாளின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் இரு நாட்டு தலைவர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
Tags:
srilanka



