பிரான்சில் ஈழத் தமிழர்கள் இலங்கை ஜனாதிபதி பிரான்ஸ் பயணத்திற்கு எதிர்ப்பு போராட்டம்


tamillk


இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பிரான்சில் உள்ள ஈழத் தமிழர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை தொடர்கின்றார்கள்.



இந்த போராட்டமானது பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் முன்றலில் இடம்பெற்றுள்ளது.



நடைபெறும் போராட்டத்தை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் பிரான்சில் இருக்கும் இலங்கை தூதரகத்திற்கு எதிராக இடம் பெற்றுள்ளது.



பிரான்சில் உள்ள தூதரகத்தில் இலங்கை தேசிய கொடியை போராட்டக்காரர்களால் அகற்றப்படலாம் என அச்சம் காரணமாக தூதரகத்தின் நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக தூதரகத்தின் முன்றலில் இருந்த இலங்கை தேசிய கொடியை அகற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்