யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! Jaffna tamil news - Tamillk news

Jaffna tamil news

 யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது.

tamillk news


இந்த திட்டத்திற்கான குழாய் இணைப்புகள் தொடர்பான டெண்டர்களை 

அழைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இத்திட்டத்தின் மூலம் 60,000 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300,000 பேர் பயனடைவார்கள் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.



இத்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறித்த பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக, தாழையடி பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்