லிட்ரோ காஸ் விலையும் உயர்ந்துள்ளது Tamillk News

 லிட்ரோ எரிவாயுவின் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 145 

tamillk newsw


ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் இன்று (4) காலை தெரிவித்தார்.


இதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 58 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் திரு.முதித பெரேஸ் தெரிவித்தார்.



விலை அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3127 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1256 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 587 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக திரு.முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்.


லிட்ரோ காஸ் 12.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.2,982 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.1198 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.561 ஆகவும் இருந்தது.

Srilanka tamil news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்