trincomale news
பாலஸ்தீனத்தின் காஸா நகரில் உள்ள அப்பாவிப் பொதுமக்களையும், சிறுவர்களையும் இலக்கு வைத்து நடாத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு வழியுறுத்தியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும், உயிரிழந்தவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்திலுள்ள ரவுண்டபோட் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
தோப்பூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து தோப்பூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து பேரணியாக வருகை தந்தவர்கள் ரவுண்டபோட் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு இஸ்ரேல் -பலஸ்தீன மோதலால் பலஸ்தீனத்தில் அதிகளவான குழந்தைகள், பொதுமக்கள் உயிரிழக்கப்படுவதை காண்பிக்கும் வகையிலும் காட்சிப்பட்டிருந்தன.
கண்டன ஆர்ப்பாட்டத்திலும், துஆ பிரார்த்தனையிலும் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.