நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....! tamil lk news

 13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

tamil lk news



குறித்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று (11.4.2024) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அதிகாரிகள் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்