கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை   கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் மறுசீராய்வு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.


இதன்படி தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில்,


 கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்