வவுனியாவில் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனர் தாக்குதல் முயற்சி! vavuniya news

 வவுனியா(vavuniya) சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (02.04.2024) மதியம் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் குறித்த பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

vavuniya news



செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தினை பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து செட்டிக்குளம் தனியார் பேரூந்தின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டமையுடன் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.




நேரசூசி(Timely) பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்