70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்...!tamil lk news

tamil lk news


 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதனை தொலைநோக்கி உதவியுடன் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய '12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.



மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095 இல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்