மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானம்
எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Srilanka Tamil News
Tags:
srilanka