அரச உத்தியோகத்தரின் தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்தசந்தேக நபர்களுக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

tamil lk news

வீதியில் சென்ற இளம் அரச உத்தியோகத்தர் ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன்ட் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கமைய சந்தேகநபர்கள் இருவரையும் ஜூலை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் கே.பி.ஆர்.எல்.விதானகமகே நேற்று (29) உத்தரவிட்டார்.




குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும்,  அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.



சந்தேகநபர்களால் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்