சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவுள்ள புதிய உறுப்பினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கதிரவேல் சண்முகம் நிரப்பவுள்ளார்.


 இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று  இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.


உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

tamil lk news



இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை கதிரவேல் சண்முகம் நிரப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்