அநுராதபுரத்தில் கோர விபத்து.....! சிறுவர்கள், பெண்கள் உட்பட 19 பேர் காயம்

tamil lk news


 அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசுசரிய பேருந்தும், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


சிசுசரிய பேருந்து மாணவர்களை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டபோது, ​​பின்னால் வந்த பேருந்து சிசுசரிய பேருந்தின் பின்புறம் மோதியது.



அந்த விபத்தில் நான்கு மாணவர்கள், பேருந்தின் சாரதி மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த 14 பெண்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Srilanka Tamil News


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்