முல்லைத்தீவில் விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

tamil lk news


 முல்லைத்தீவு(mullaitivu) - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்சியான மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


குறித்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான மழையுடனான காலநிலை நிலவுகின்றது.


இதனால் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் , போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட வேலையில் ஈடுபடமுடியாது பாரிய சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.


அத்துடன், சில பகுதிகளில் வெள்ளநீர் அதிகரித்து காணப்படுவதனாலும், வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையினாலும், புதுக்குடியிருப்பு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இதேவேளை, முத்துஐயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.


அந்த குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் மஞ்சுளா ஜொய்ஸ்குமார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் திறந்து விடப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டு குளம்  நீர் மட்டம் உயர்ந்த நிலை

முத்தையன்கட்டு குளமானது 24 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 17' அடி 6" அங்குலம் வான் கதவுகள் வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே குளத்தின் 2 கதவுகள் 6 இஞ்சி திறக்கப்பட்டுள்ளன.

tamil lk news


எனவே முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அத்துடன்,  தாழ்வான பகுதிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அவசியமாயின் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரவும். பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்றவும், தொடர்ந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதையும் உறுதி செய்யவும் என முல்லைதீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வடக்கு - கிழக்கில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினால், வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்