Jaffna News Tamil
யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்ட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.