Srilanka News Tamil
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
தனியார் துறையின் அடிப்படை ஊதிய உயர்வை ஏப்ரல் முதல் 27,000 ரூபாய் ஆகவும், அடுத்த ஜனவரி முதல் 30,000 ரூபாய் ஆகவும் அதிகரிக்க இணக்கம்.
மேலும், அரச அத்தியாவசிய சேவை வெற்றிடங்களை நிரப்ப 1000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.