எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் வறட்சியான காலநிலை

 Srilanka News Tamil

 தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் விளைவால்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் வறட்சியான காலநிலை - Dry weather to continue for the next 02 weeks


புவி வெப்பமடைதலின் அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


காலநிலை மாற்றத்தின் விளைவால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரை வெப்பநிலை உயர்வடைவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



மேலும் இந்த காலப்பகுதியில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்