இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

Tamil lk News


  வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அத்துடன், குறித்த தினங்களில் இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள் ஆகியவையும் மூடப்படும்.



 இலங்கையில் மே மாதம் 10ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்