நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று (20) மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிபார்க்க அதனை செலுத்திய சாரதி சென்ற நிலையிலேயே இந்த முச்சக்கர வண்டி இவ்வாறு தீ பிடித்து எரிந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேசவாசிகள் ,பொலிஸார், ஒன்றிணைந்து நீர் ஊற்றி அணைக்க முயன்ற போது முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது முச்சக்கர வண்டியில் இரண்டு பேர் பயணித்திருந்ததாகவும், பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்