கிளிநொச்சியில் நோயாளர் காவு வண்டி விபத்து

Kilinochchi news-tamillk


கிளிநொச்சி டிப்போ சந்தியில் நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (17.06.2023) மாலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.



நோயாளர் காவு வண்டியும் மோட்டார் வண்டியும் விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்