விடுதலை புலிகளை மீள உருவாக்குவதற்காக ஆயுதங்களையும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபாட்டில் கீழ் கைது செய்யப்பட்ட 13 நபர்கள் மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பானது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காக ஆயுடங்களை சேகரித்தல் பதுக்கி வைத்தல் மற்றும் இவர்கள் போதை பொருட்கள் வர்த்தகத்திலும் ஈடுபடுகின்றார்கள் என இந்தியாவின் NIA குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி அதேபோன்று கண்ணா என அழைக்கப்படும் புஷ்பராஜா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருட்கள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்து இந்த குற்றச்சாட்டுகளை செய்துள்ளனர் என இந்தியா புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் திருச்சி விசேட முகாமில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் செய்யும் குற்ற செயல்களின் மூலம் கிடைக்க பெறும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் எனவும் இந்தியா புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களிடமிருந்து போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்களை கைப்பற்றியதோடும். பணம் தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என இந்தியா புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள்களின் வர்த்தகத்தின் மூலமாக கிடைக்கப்பெறும் பணமும் தங்கமும் கிடைத்ததை இவர்கள் சட்ட விரோதமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரிமாறியுள்ளர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.