ஜப்பான் நாட்டின் பாலியல் குற்ற சட்டங்களில் முக்கிய திருத்தங்களை தற்போது அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் ஜப்பானில் தற்போது பாலியல் உறவுக்காக சட்டபூர்வமாக 13 வயதில் இருந்து 16 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் உலகிலேயே அதிக குறைந்த வயதில் சட்டபூர்வமாக பாலியல் உறவுக்காக ஒப்புதல் வயது ஜப்பானில் இருந்துள்ளது. தற்போது ஜப்பான் வயதை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை
இதன் மூலமாக சிறுவர்கள் மீது பாலியல் குற்றங்களை தடுப்பதற்கும் இந்த சட்டத்தின் மூலமாக நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் வரவேற்பு
தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சட்டத்தினை மனிதா உரிமையகம் மற்றும் சமூக ரீதியான அமைப்புக்கள் வரவேற்கின்றனர்.
இந்த சட்டத்தின் மூலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுக் கொடுப்பதற்கு வழி வகுக்கும் வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பாலியல் ஒப்புதல் வயது
பாலியல் உறவுக்காக ஒப்புதல் வயதாக இங்கிலாந்தில் 16 ஆகவும், பிரான்சில் 15 ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனா 14 ஆகவும் காணப்பட்ட நிலையில் ஜப்பானில் 1907 ஆம் ஆண்டில் இருந்து 13 வயதாக காணப்பட்டிருந்த நிலையில் தற்போது 16 வயதுக்கு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.