அரச ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை - பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

 

srilanka tamil news

அரச அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் 15 சதமானவர்கள் மாத்திரமே சரியாக வேலை செய்கிறார்கள் மீதமுள்ள 85 சதவீதமானவர்கள் வேலை செய்யாமல் இருக்கின்றனர்

இவ்வாறு இந்த விடயத்தினை நேற்றைய (20) தினம் பாராளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் இவ்வாறு கூறியுள்ளார்.




இது தொடர்பாக தொடர்ந்து அவர் கூறுகையில்

"உலக ரீதியாக பார்க்கும் போது ஒரு நாட்டின் சனத்தொகையில் 3 சதவீதமானவர்கள் அரசாங்கத்தில் உத்தியோதாரராக இருக்கிறார்கள்.


ஆனால் எமது நாட்டில் 22 மில்லியன் மக்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு சேவைகளில் உள்ளனர்.

இதற்கான காரணம் நாட்டின் ஆட்சிக்கு வருவதற்காகவும் அதே போன்று அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் மற்றும் தமது செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்காகவும் உத்தியோதர்களை அரசு சேவைகளில் இணைத்துக் கொள்கிறார்கள்.

நமது நாட்டில் இருக்கும் அரசு சேவைகள் அனைத்தும் இலாபத்தில் இயங்குகிறதா? நட்டத்தில் இயங்குகிறதா? அப்படி நஷ்டத்தில் இயங்கினால் அதை எப்படி சீர் செய்வது என்பதை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.



அதே சமயங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் அதில் 15 சதவீதத்தினர் மாத்திரமே தமது பணியை சரிவர செய்கின்றனர்

இப்படி இருக்கும்போது எப்படி இந்த நாடு வளர்ச்சி அடையும்" என பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்