முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டிருந்த விகாரையில் நீதிமன்ற கட்டளையும் மீறி தொடர்ந்து இராணுவத்தினர் இருக்கின்றார்கள்.
அதேபோன்று இராணுவத்தினரின் பங்களிப்புடனே இங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பணிகள் இடம் பெற்று வருவதாக என்பதனை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் குறித்த குருந்தூர் மலையில் தொடர்ந்து ராணுவத்தினர்கள் நிலை கொண்டு இருப்பதால் அப்பிரதேசத்திற்கு வருகை தரும் வானங்கள் அனைத்தையும் பதிவுகள் செய்து வருகின்றனர்.
இதன் மூலமாக குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலமாகிறது என சில ஊடகங்கள் மூலமாக தகவல்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Tags:
srilanka