அனுராதாபுரம் போதனை வைத்தியசாலையில் கடமைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு வைத்தியர்கள் நேற்றைய முன்னைய தினம் 19 பிற்பகல் அளவில் இடம்பெற்ற மோதல் காரணமாக இரண்டு வைத்தியர்களும் கடுமையான காயங்களுடன் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மோதலில் ஈடுபட்டவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட வைத்தியர் ஒருவரும் மற்றும் பொது வைத்தியர் ஒருவரும் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மோதலுக்கான காரணம்
இரண்டு வைத்தியர்களுக்கும் இடையிலான கடமைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த பிரச்சினையால் இருவருக்கும் இடையில் வாய்தாக்கங்கள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இவ்வாறு இருவருக்கும் இடையிலான கைகலப்பு அனுராதாபுரம் போதனா வைத்தியசாலையின் திட்டமிடல் அலுவலகத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இருவரும் இடையிலான மோதலில் படுகாயம் அடைந்து இரண்டு வைத்தியர்களும் நேற்று பிற்பகல் வரை வைத்தியசாலை விடுதியில் இலக்கம் 20 மற்றும் 11 இல் சிகைகள் பெற்று வருவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு வைத்தியர்களும் அங்கு வருகை தந்திருந்தால் நோயாளர்கள் அதேபோன்று அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவமனையின் ஊழியர்கள் ஆகியோர்களின் முன்னிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது