இன்று காலை இந்தியா-சென்னையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று 16 காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.
இவ்வாறு வருகை தந்த கப்பலை துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி செல்வா வரவேற்றார்.
இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட பரீட்சார்த்த முயற்சியாக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் ஆனது இன்று காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
25 கோடி பெருமதியில் அமைக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் இந்தியா துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், கப்பல்துறை அமைச்சின் செயலாளர், துறைமுகங்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி. யாழ். அரசாங்க அதிபர் ஆகியோருடன் கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.