குருந்தூர் மலை மற்றும் திரியாய் விகாரங்களில் காணிகளில் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவினால் நிபுணர் குழு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை பகுதியான திரியாய் விகாரை காணிகளை கோரப்பட்டுள்ள விவகாரங்களை பற்றி முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழு நியமிக்கப்படவுள்து.
அந்த வகையில் முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்காக 3,000 ஏக்கர் நிலப்பரப்பையும் திருகோணமலை, திரியாய் விகாரையின் 2,000 ஏக்கர் நிலப்பரப்பையும் இந்த விடயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் அதேபோன்று வன ஜீவராசி திணைக்களம் இவர்கள் அனைவரும் இந்த காணி அனைத்தும் அரசாங்க தொல்பொருள் பிரதேசங்கள் என தெரிவிப்பது எந்த அடிப்படையில் என்பதை உடனடியாக ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.