நாட்டில் தற்போதைய நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாதென நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்ய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனம் இறக்குமதி செய்வது தொடர்பாக தீர்மானங்களை எடுக்க முடியும் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
.
தற்போது எரிபொருளுக்காக 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கப்பட்டு இருந்த போதும். அது அமெரிக்கா டொலருக்கு நிகராகத்தான் இலங்கை ரூபாய் பெறுமதியில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
வாகனங்கள் இறக்குமதி தொடர்பான ஆய்வுகள்
நாட்டுக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அதிகளவான டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் அவற்றை சரியாக ஆய்வு செய்த பின்னரே இறக்குமதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது நாட்டுக்கு அதிகளவான அன்னிய நாணயக் கையிருப்பு ஒதுக்கப்பட வேண்டியுள்ளதால் அவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது வானங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா டொலருக்கு நிகராக கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்து காணப்பட்டமையை அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் எரிபொருள் கொள்ளளவு செய்வதற்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மத்திய வங்கியில் இருந்து சுமார் 75 முதல் 80 மில்லியன் அமெரிக்கா டொலர்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.