வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து ! ஒருவர் படுகாயம்! vavuniya tamil news

(vavuniya tamil news -tamillk) வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vavuniya news


பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விபத்து

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கிள் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு மோட்டார் சைக்கிள்களும் சேதம்

இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.



சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்